விஜய்க்குப் பெரிக்காத்தான் வாழ்த்து! நீதிக்கான வெற்றி என புகழாரம்!
- THINAGAREN SANGGAREN
- 11 May, 2026
மே 11,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிற்கு மலேசியாவின் எதிர்கட்சியான பெரிக்காத்தான் வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளது. இன்று காலை பெரிக்காத்தானின் பொதுச் செயலாளர் TAKIYUDDIN HASSAN பெரிக்காத்தானின் வாழ்த்துச் செய்தியைச் சமூகவலைத்தலத்தில் பகிர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்களுக்கு வாழ்த்து என தெரிவித்துள்ளார்.
சமூகநீதி, சீர்த்திருத்தம், இளைஞர் மேம்பாடு, நவீனமயமாக்கல்
போன்ற முக்கிய கோட்பாடுகளை முன்னிருத்தி தமிழ் நாட்டில் ஆட்சி அமைத்திருக்கும் தமிழக
வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாகுபாடு இல்லாது, மக்களிடையே
பிளவுகளை ஏற்படுத்தாத ஆட்சியை வழங்குவார் என நம்பிக்கையுடன் இந்த வாழ்த்தைத் தெரிவித்துடன்
இளைஞர்களிடயே பிரபலமான ஒருவர் ஆட்சியை அமைத்தால் அந்த ஆட்சி இளைஞர்களின் நலனைப் பாதுகாக்கும்
என தாம் நம்புவதாகவும் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மலேசிய இந்தியர்கள் கொண்டாடி
வருவதைத் தாமும் கண்டு நெகிழ்வதாகவும் பெரிக்காத்தான் பொதுச் செயலாளர் TAKIYUDDIN HASSAN குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



