விநாயகர் சதுர்த்தி
- Surendran Sumdraraj
- 14 Sep, 2026
விநாயக சதுர்த்தி (Ganesha Chaturthi) என்பது விநாயகரின் இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்விழா மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது.[1] இது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக உள்ளது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்குகிறார்கள். சுதந்திர போராட்டக் காலத்தில், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்களிடையே தேசியம் வளர ஊர்வலமாக கொண்டாட ஊக்குவித்தார்.[2][3][4] மகாராட்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்துகின்றனர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும், ரூபாய் நோட்டுகளையும், இதன் போது வழங்குவர்.
விநாயகர் வழிபாடு :
நாயகர் என்றார் தலைவன். விநாயகர் என்றால் தனக்கு மிஞ்சிய தெய்வமோ, தலைவனோ இல்லாதவர் என்று பொருள். ஞானம், அறிவு, செல்வ வளம், மகிழ்ச்சி, வெற்றியை தரும் கடவுளாக விநாயகப் பெருமானையே வழிபடுகிறோம். எந்த காரியத்தை துவங்குவதற்கும் முன்பும் விநாயகரை வழிபட்டு விட்டு துவங்கினால் அந்த காரியம் எந்த விதமான தடையும் இல்லாமல், வெற்றிகரமாக நிறைவடையும் என்பது நம்பிக்கை. எந்த பிரச்சனை, கிரக தோஷம் என்றாலும் கணபதியை வணங்கினால் அனைத்தும் நீங்கி, சந்தோஷம் ஏற்படும் என்பது நம்பிக்கை. அனைத்து கணங்களும் இவருக்குள் அடங்கம் என்பதால் இவருக்கு கணநாதன் என்ற திருநாமமும் உண்டு.
விநாயகர் சதுர்த்தி வரலாறு :
புராண கதைகளின் படி, தான் நீராடி விட்டு, சிவ பூஜை செய்யும் வரை யாராவது காவலாக இருக்க வேண்டும் என்பதால் பார்வதி தேவி, தன்னுடைய உடலில் பூசி இருந்த மஞ்சள் மற்றும் சந்தனத்தைக் கொண்டு, விநாயகரை உருவாக்கினார். விநாயகரை காவலாக இருக்க சொல்லி விட்டு, பார்வதி தேனி நீராட சென்று விட்டார். அந்த சமயத்தில் அங்கு வந்தது சிவன் என தெரியாமல், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார் விநாயகர். இதனால் கோபமடைந்து சிவ பெருமான், விநாயகருடன் போரிட்டு அவரது தலையை வெட்டினார். இதைக் கண்டு ஆத்திரமடைந்தார் பார்வதி தேவி. பிறகு தனது தவறை உணர்ந்த சிவ பெருமான், பூத கணங்களை அனுப்பி, நீங்கள் செல்லும் சிலையில் வடக்கு புறமாக தலை வைத்து படுத்து இருக்கும் உயிரினத்தின் தலையை எடுத்து வர உத்தரவிட்டார். அதன் படி, யானையின் தலையை சிவகணங்கள் எடுத்து வந்தனவர். அந்த தலையை கொண்டு விநாயகருக்கு மீண்டும் உயிர் அளித்தார் சிவ பெருமான். இவ்வாறு யானை தலையுடன், ஓம்கார வடிவமாக விநாயகர் உருவெடுத்த ஆவணி சதுர்த்தி தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் :
விநாயகர் சதுர்த்தி அன்று மக்கள் களிமண்ணால் விநாயகர் உருவம் செய்து, அவரை வீற்றில் எழுந்தருள செய்கிறார்கள். அவருக்கு எருகம்பூ மாலை, அருகம்புல் சாற்றி, விநாயகருக்கு விருப்பமான அவல், பொரி, கொழுக்கட்டை, சுண்டல், மோதகம் ஆகியவை படைத்து வழிபடுகிறார்கள். விநாயகர் சதுர்த்தி இந்தியாவின் பல பகுதிகளிலும் பல விதமாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் 3 நாட்கள் கொண்டாடப்பட்டு, மூன்றாவது நாளில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் எடுத்துச் சென்று கரைக்கும் வழக்கம் உண்டு. ஆனால் வட மாநிலங்களில் 10 நாட்கள் திருவிழாவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் வழக்கம் உள்ளது.
விநாயகர் சதுர்த்தி 2026 தேதி, நேரம் :
2026ம் ஆண்டில் விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் மாதம் 14ம் தேதி, ஆவணி 28ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. செப்டம்பர் 14ம் தேதியன்று காலை 08.41 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 15ம் தேதி காலை 09.22 மணி வரை சதுர்த்தி திதி உள்ளது. பொதுவாகவே சதுர்த்தி வழிபாட்டினை சந்திர உதயத்திற்கு பிறகு தான் மேற்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் செப்டம்பர் 14ம் தேதியன்று மாலை வேளையில் தான் சதுர்த்தி திதி உள்ளது. அதனால் இந்த நாளையே விநாயகர் சதுர்த்தி தினமாக கணக்கில் எடுத்துக் கொண்டு விநாயகர் வழிபாடுகளை செய்ய வேண்டும்.
லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



