விநாயகர் சதுர்த்தி திருநாள் – அண்ணாமலை வாழ்த்து

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 14 –

விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் பக்தியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கோவில்கள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

விநாயகப் பெருமானின் அருளால் மக்கள் நினைத்த அனைத்து நல்ல காரியங்களும் இனிதே நிறைவேற வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், அனைவரின் வாழ்விலும் வளம், நலம் மற்றும் மகிழ்ச்சி பெருக வேண்டும் என்றும், ஒவ்வொரு குடும்பத்திலும் அன்பும் அமைதியும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *