இணையத்தில் வைரலான ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ கணக்குக்கு இந்தியாவில் தடை

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி, மே 22-

இந்திய இளைஞர்கள் மத்தியில் வேகமாக பிரபலமான “Cockroach Janta Party (CJP)” என்ற நகைச்சுவை மற்றும் அரசியல் விமர்சன பாணியிலான சமூக வலைதள இயக்கத்தின் X (முன்னாள் ட்விட்டர்) கணக்கை இந்தியாவில் முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டரீதியான கோரிக்கையின் அடிப்படையில் இந்த கணக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக X நிறுவனம் தெரிவித்துள்ளது. “காக்ரோச் ஜனதா பார்ட்டி” இயக்கத்தை தொடங்கிய Abhijeet Dipke இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த இயக்கம் கடந்த சில நாட்களில் கோடிக்கணக்கான இளைஞர்களின் ஆதரவை பெற்றிருந்தது. வேலைவாய்ப்பு இல்லாமை, தேர்வு முறைகேடுகள், அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகள் மீதான அதிருப்தி போன்ற பிரச்சினைகளை நகைச்சுவை மற்றும் மீம் வடிவில் பதிவு செய்து வந்தது. Instagram-ல் இந்த இயக்கம் 1 கோடிக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களை பெற்று, பாஜக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் கணக்குகளை விட அதிக கவனம் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இயக்கத்தின் பெயர், இந்திய தலைமை நீதிபதி Surya Kant இளைஞர்களை “cockroaches” என குறிப்பிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய கருத்துக்கு எதிரான நையாண்டியாக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், இந்த இயக்கம் வேகமாக வைரலானது குறிப்பிடத்தக்கது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *