வக்கீலாக களமிறங்கும் விஷால் – துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படம்
- Surendran Sumdraraj
- 10 Sep, 2026
சென்னை, செப். 10 –
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மகுடம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த அந்தப் படத்தை விஷாலே இயக்கி நடித்திருந்தார். இதில் துஷாரா விஜயன் கதாநாயகியாகவும், அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.
‘மகுடம்’ படத்தை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘புருஷன்’ திரைப்படத்தில் விஷால் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, ‘கொடி’, ‘லீடர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் விஷால் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் வக்கீலாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



