விஸ்மயா மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படம் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

கொச்சி: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகளும் நடிகையுமான விஸ்மயா மோகன்லால், தனது அடுத்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். புதிய படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

விஸ்மயா மோகன்லால் அண்மையில் வெளியான ‘துடக்கம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மலையாள திரையுலகில் அறிமுகமானார். இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கிய அந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

‘துடக்கம்’ படத்தில் தற்காப்புக் கலை தெரிந்த இளம் பெண்ணாக விஸ்மயா நடித்திருந்தார். மர்ம நபரால் குறிவைக்கப்படும் நிலையில், தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அவர் மேற்கொள்ளும் சண்டைக் காட்சிகள் மற்றும் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்றன. இப்படம் செப்டம்பர் 18-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்திலும் வெளியானது.

இந்த நிலையில், விஸ்மயாவின் அடுத்த திரைப்படத்தை கியூப் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

புதிய படத்தை இயக்குநர் அருண் போஸ் இயக்குகிறார். படத்திற்கான திரைக்கதையை ரதீனா சுஹாஸ் எழுதுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *