இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: படம் பிடிக்கச் சென்ற 8 பேர் மாயம்
- Surendran Sumdraraj
- 10 Sep, 2026
ஜகார்த்தா, செப். 10 –
இந்தோனேசியாவின் அனக் கிரக்டாவ் எரிமலை வெடிப்பை நேரில் படம் பிடிக்கச் சென்ற 5 புகைப்பட பத்திரிகையாளர்கள், 2 ஊழியர்கள் மற்றும் ஒரு வழிகாட்டி உள்பட 8 பேர் நடுக்கடலில் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காணாமல் போனவர்கள் காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் எரிமலை அமைந்துள்ள பகுதியை நோக்கி புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மாலை தாங்கள் எரிமலைப் பகுதியை அடைந்துவிட்டதாக அவர்கள் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். அதன்பிறகு அவர்களிடமிருந்து எந்த தொடர்பும் கிடைக்கவில்லை.
மாயமானவர்கள் முன்னணி செய்தி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தோனேசிய கடலோர பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் படகுகள் மற்றும் கண்காணிப்பு சாதனங்களின் உதவியுடன் அவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



