முன்னாள் பிரதமர் நஜிப்பின் முழு விடுதலை- மன்னரிடம் பகாங் அம்னோ இளைஞர் பிரிவு வேண்டுகோள்
- Tamil Malar (Reporter)
- 15 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 15-
பகாங் மாநில அம்னோ இளைஞர் பிரிவு, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு முழுமையான விடுதலை வழங்குமாறு மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு அதிகாரப்பூர்வமாக மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவை பகாங் மாநில இளைஞர் பிரிவு சார்பில், பெக்கான் நாடாளுமன்ற இளைஞர் பிரிவு தலைவர் முகமட் பக்ருல் அக்மால் முகமது முன்னெடுத்தார். இந்த மனு பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.
“எங்களின் தலைவரான டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு முழுமையான சுதந்திரம் வழங்குமாறு மன்னரின் கருணையையும், இரக்கத்தையும் பணிவுடன் கோருகிறோம். துவாங்கு சுல்தான் இப்ராஹீம், நீதி, நியாயத்தின் அடையாளமாக விளங்கும் மன்னராக, இந்த விடயத்தை பரிசீலித்து விரைவான தீர்வை வழங்க வேண்டும்” என அவர் கூறினார்.
மேலும், இந்த வேண்டுகோள் அரசியல் நோக்கத்தைக் காட்டிலும், நீதி, மனிதாபிமானம், சமூக அமைதியை கருத்தில் கொண்டு முன்வைக்கப்படுவதாகவும் அவர் விளக்கினார். முன்னாள் பிரதமரின் தலைமையில் நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்களையும் மக்கள் இன்னும் நினைவுகூருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மனு தொடர்பாக மாமன்னரின் முடிவு, நாட்டின் அரசியல் சூழலில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



