4 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் மூதாட்டி பலி! மூவர் படுகாயம்!

top-news

பிப்ரவரி 2,

சாலையோரக் கடையில் நின்றுக் கொண்டிருந்த 65 வயது மூதாட்டி மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் Zainah Abdul Latif எனும் அம்மூதாட்டி சிகிச்சை பலனின்றி மலாக்கா மருத்துவமனையில் உயிரிழந்தார். நேற்று மாலை 4.45 மணியளவில் Jalan Tangga Batu சாலையில் ஏற்பட்ட விபத்தில் 3 வாகனங்கள் சேதமடைந்த நிலையில் மூவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அம்மூதாட்டி உயிரிழந்ததை மத்திய மலாக்கா காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். 

கட்டுப்பாட்டை இழந்த புரோட்டோன் சாகா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த மற்றொரு வாகனத்தையும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தையும் மோதி சாலையோரக் கடையில் நின்றுக் கொண்டிருந்த மூதாட்டியையும் விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என Christopher Patit தெரிவித்தார்.
Seorang wanita warga emas, Zainah Abdul Latif, 65 maut selepas terlibat dalam nahas tiga kereta di Jalan Tangga Batu, Melaka. Kejadian berlaku apabila sebuah kereta Proton Persona mengelak kenderaan bertentangan menyebabkan rempuhan pada Proton Saga yang dinaiki mangsa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *