பினாங்கு பாலத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறிய மூவர் கைது

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ்டவுன், ஆக. 4-

பினாங்கு பாலத்தின் தடை செய்யப்பட்ட பாதுகாப்புப் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒரு பெண் உட்பட மூவர், மலேசிய கடல்சார் அமலாக்க முகமை பினாங்கு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

பினாங்கு மாநில கடல்சார் அமலாக்க முகமை இயக்குநர் கேப்டன் மரிடிம் முகமது சுஃபி முகமட் ரம்லி தெரிவித்ததாவது, மாநில கடற்பரப்பில் நேற்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அமலாக்க நடவடிக்கையின்போது இந்த கைது இடம்பெற்றது.

அதிகாரிகள் பினாங்கு பாலத்தின் தூண்கள் அமைந்துள்ள பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பாதுகாப்பு வலயத்திற்குள் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த பகுதி அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்ட இடமாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், அவர்கள் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களால் பொதுமக்கள் அனுமதியின்றி இவ்வகை பகுதிகளுக்குள் நுழைவது சட்டவிரோதமான செயலாகும் என அதிகாரிகள் நினைவூட்டினர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *