RM100,000 மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகளுடன் பெண் கைது!
- Sangeetha K Loganathan
- 31 Jan, 2025
ஜனவரி 31,
சிறப்புக் கடத்தல் ஒழிப்புப் பிரிவான PGA நடத்திய சோதனையில் RM100,000 ரிங்கிட் மதிப்பிலானக் கடத்தல் சிகரெட்டுகளுடன் 41 வயது உள்ளூர் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். காலை 8.30 மணியளவில் கடத்தல் சிகரெட்டுகள் இருப்பதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாகத் தென்கிழக்கு சிறப்புக் கடத்தல் ஒழிப்புப் பிரிவின் இயக்குநர் Datuk Nik Ros Azhan Nik Ab Hamid தெரிவித்தார்.
சுங்க வரி செலுத்தப்படாமல் இருந்த 46,000 சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்ததாகவும் சம்மந்தப்பட்ட பகுதியில் இருந்த 41 வயது உள்ளூர் பெண் ஒருவர் கோலா கிராய் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Seorang wanita tempatan berusia 41 tahun ditahan bersama 46,000 batang rokok seludup bernilai RM100,000 dalam operasi PGA. Rokok tersebut tidak bercukai dan dirampas dalam serbuan di Kuala Krai. Suspek kini ditahan untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



