கல்லில் மோதிய மோட்டார் சைக்கிள்! இளம்பெண் பலி!

top-news

பிப்ரவரி 12,

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் ஓரம் இருந்த கல்லில் மோதி விபத்துக்குள்ளானதில் 27 வயது இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அலோர் காஜாவில் உள்ள Jalan Kasa Height சாலையில் நள்ளிரவு 12.45 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்ததாக அலோர் காஜா மாவட்டக் காவல் ஆணையர் Ashari Abu Samah தெரிவித்தார்.

சாலையின் வலதுபுறம் திரும்பும் போது மோட்டார் சறுக்கியதில் அருகில் இருந்த கல்லில் மோதி 27 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அவர் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அலோர் கஜா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அலோர் காஜா மாவட்டக் காவல் ஆணையர் Ashari Abu Samah தெரிவித்தார்.

Seorang wanita berusia 27 tahun maut selepas motosikal yang ditunggang hilang kawalan lalu melanggar batu di tepi jalan di Jalan Kasa Height, Alor Gajah. Mangsa mengalami kecederaan parah di kepala dan disahkan meninggal di tempat kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *