இன்சூரன்ஸ் பணத்துக்காகக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்ய முயற்சித்த மனைவி!
- Thinagaren Sanggaren
- 04 Jan, 2026
ஜனவரி 4,
கணவனைக் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் உள்ளூர் பெண் ஒருவரும் அவரின் காதலனும் கடந்த டிசம்பர் 23 கைது செய்யப்பட்டதை அடுத்து இன்று நீதிமன்ற விசாரணையில் தாங்கள் இருவரும் குற்றமற்றவர்கள் என்றும் மேலதிக விசாரணையுடன் ஜாமின் கோரிக்கையும் விடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட மனைவியையும் அவரின் காதலனுக்கும் RM 20,000 ஜாமினை ஜொகூர் பாரு Sesyen நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
கடந்த டிசம்பர் 22, ஜொகூர் பாரு Taman Ehsan Jaya வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 47 வயது கணவரைத் தலையணையால் முகத்தை மூடி கொலை செய்ய முயற்சித்ததாக 47 வயது ஆடவரின் மனைவியையும் அவரின் காதலனையும் காவல் துறை டிசம்பர் 23 அதிகாலையில் கைது செய்ததாக Seri Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 47 வயது கணவர் அதிகாலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் கடந்த சில வாரங்களாகக் கணவரின் இன்சூரன்ஸ் பணம் குறித்து மனைவி பல முறை ஏஜெண்டிடம் விவரங்களைக் கேட்டு வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட நீதிமன்ற விசாரணையைப் பிப்ரவரி 3 மேற்கொள்வதாக ஜொகூர் பாரு Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



