PN கூட்டணியில் பெர்சாத்து நீடிக்கவே பாஸ் விரும்புகிறது! ஆனால், ஆணவம் அதிகரித்தால்.... - பாஸ் எச்சரிக்கை
- Shan Siva
- 24 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 24: மலாய் வாக்காளர்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள, கூட்டணியின் ஒற்றுமையைப் பாதுகாப்பது அவசியம் என்றும், எனவே பெர்சாத்து பெரிகாத்தான் நேஷனலில் நீடிக்க வேண்டும் என்று தனது கட்சி விரும்புவதாகவும் பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பெர்சாத்து பிஎன்-ஐ எதிர்க்க அல்லது கூட்டணியின் தற்போதைய போக்கிற்கு எதிராக
மிகவும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கத் தேர்ந்தெடுத்தது போல் தனக்குத் தோன்றுவதாக
அவர் கூறினார்.
தங்கள்
நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பெர்சாத்து பிஎன்-இல் நீடிக்க வேண்டும் என்று தாங்கள்
விரும்புகிறோம்.
நீக்கப்பட்ட
உறுப்பினர்களை வரவேற்க விரும்புகிறோம். இந்தப் பிரச்சினைகள் முறையாகக்
கையாளப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறோம் என்று உத்துசான் மலேசியாவுக்கு அளித்த
பேட்டியில் அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
பாசிர் மாஸ்
நாடாளுமன்ற உறுப்பினர், பெர்சாத்து தனது ஆணவமான அணுகுமுறையைத்
தொடர்ந்தால், அது நாட்டின் அரசியல் களத்தில் தனது இடத்தை
இழக்கக்கூடும் என்றும் எச்சரித்தார்.
முன்னாள் பிரதமர்
டாக்டர் மகாதீர் முகமது போன்ற செல்வாக்கு மிக்க நபர்கள் கூட தங்கள் அரசியல்
செல்வாக்கை இழக்கக்கூடும். பெர்சாத்துவின் தலைவிதி பெஜுவாங்கின் தலைவிதியை விட
சிறப்பாக இருக்கும் என்று தாம் நம்பவில்லை என்று ஃபத்லி கூறினார்.
பாஸ் கட்சி, கடந்த ஜூன் 8-ஆம் தேதி பெர்சாத்துவுடனான தனது அரசியல்
ஒத்துழைப்பை முடித்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து, வரவிருக்கும் ஜொகூர்
மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பாஸ் கட்சிக்கு எதிராக முழு
வீச்சில் களமிறங்குவதாகவும், பிஎன் கட்சியின் சின்னத்தின் கீழ்
போட்டியிடுவோம் என்றும் பெர்சாத்து உறுதியளித்தது.
கூட்டம் சுமூகமாக
நடைபெற்றதாகவும், பிஎன் கூட்டணியில் பெர்சாத்துவின் நிலை
குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



