ஜொகூரில் 74 வெளிநாட்டினர்கள் கைது! 2 மாதக் குழந்தை மீட்பு!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 29,

இன்று அதிகாலை ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில் 74 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டனர். அதிகாலை 12.45 மணிக்கு செனாய் மாவட்டத்தில் உள்ள இரண்டு மாடி வீட்டில் சோதனையை மேற்கொண்டதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை சோதனை நடத்தியதில் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த 20 பெண்கள் உட்பட 74 வெளிநாட்டினர்களைக் கைது செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. சோதனையின் போது வீட்டின் பின் பகுதி வழியாகத் தப்பிய வெளிநாட்டினர்களைக் குடிநுழைவுத் துறை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட 74 வெளிநாட்டினர்களும் INDONESIA, MYANMAR, BAGLADESH, ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுடன் இருந்த 2 மாதக் குழந்தை தற்போது சமூகநலப் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட 2 மாடி அடுக்கு மாடி வீட்டில் அதிகமான வெளிநாட்டினர்கள் தங்கியிருப்பதாகக் குடியிருப்புவாசிகள் புகார் அளித்த நிலையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் இளைஞர்கள் என்றும் 47 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *