சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த 2,251 இந்தோனேசியர்களை வெளியேற்றிய குடிநுழைவுத் துறை!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 7,


சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த இந்தோனேசியர்களைத் தொடர்ந்து அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வருவதாகத் தேசியக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. சபா மாநிலத்தில் கைது செய்யப்பட்டை சட்டவிரோதக் குடியேறிகளை அவர்களின் நாட்டுக்கு அனுப்பிய பின்னர் சபா மாநிலக் குடிநுழைவுத் துறை இதுவரையில் 2.251 இந்தோனேசியர்களை மலேசியாவிலிருந்து வெளியேற்றியிருப்பதாக சபா மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATUK SITTI SALEHA HABIBI YUSSOF தெரிவித்தார்.

இந்த ஆண்டு கைது செய்யப்பட்ட சட்டவிரோதக் குடியேறிகளின் எண்ணிக்கை 10,212 என்றும் அவர்களில் இதுவரை 2,251 பேர் மட்டுமே சிறை தண்டனைக்குப் பின்னர் அவர்களின் நாடுகளுக்கு அனுப்பியிருப்பதாகவும் சபா மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATUK SITTI SALEHA HABIBI YUSSOF விளக்கமளித்தார். குழந்தைகள் உட்பட முதியவர்கள் என 3 முதல் 78 வயதுக்குற்பட்டவர்கள் நேற்று அவர்களின் சொந்த நாட்டுக்குத் திரும்பியதாகச் சபா மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATUK SITTI SALEHA HABIBI YUSSOF தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *