இளம்பெண்கள் உட்பட 49 வெளிநாட்டினர் கைது! ஜொகூர் குடிநுழைவுத் துறை அதிரடி!
- Thinagaren Sanggaren
- 14 Dec, 2025
டிசம்பர் 14,
இன்று நள்ளிரவு ஜொகூர் ஜெயாவில் உள்ள வணிகக் கடையின் மேல்தளத்தில் ஜொகூர் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் இளம்பெண்கள் உட்பட 49 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட வணிகக் கடையின் மேல்தளத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையை விடவும் அதிகமான வெளிநாட்டினர்கள் தங்கியிருப்பதாகப் பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்றதால் இன்று நள்ளிரவு 12.10 மணிக்கு இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATO RUSDI DARUS தெரிவித்தார்.
சோதனையின் போது பல நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்து தற்காலிகப் பணிகளில் அவர்கள் ஈடுப்பட்டிருப்பதாகவும் முறையான ஆவணங்கள் இல்லாமல் அவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் தங்கியிருப்பதாகவும் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATO RUSDI DARUS தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 16 இளம்பெண்கள் என்றும் 33 ஆண்கள் என்றும் INDONESIA, MYANMAR, PAKISTAN, BANGLADESH ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 முதல் 49 வயதினர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



