காட்டில் காணாமல் போன முதியவர் 1 வாரத் தேடுதலுக்குப் பின் மீட்பு!

top-news

மார்ச் 2,

கடந்த வாரம் காணாமல் போனதாக நம்பப்படும் 69 வயது முதியவர் அடர்ந்த காட்டுப் பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 69 வயதான Kamoi Paun எனும் முதியவர் Saratok பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியிலிருந்து காணாமல் போனதாகப் புகாரைப் பெற்ற நிலையில் அவரைத் தேடும்பணியை மீட்புப் படையும் பாதுகாப்பு ஆணையமும் மேற்கொண்ட நிலையில் இன்று காலை 9 மணியளவில் Luang காட்டுப்பகுதியில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

உடலில் சில காயங்களுடன் மரத்தடியில் அவர் அமர்ந்திருந்ததாகவும் அவரின் குடியிருப்புப் பகுதியிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் அவர் கண்டுப்படிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுப் பகுதியில் வழி தவறி சுற்றியவர் ஆற்று நீரை மட்டுமே குடித்து 1 வாரமாகப் போராடியதாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் சரவாக் மாநில மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

Sebuah operasi menyelamat menemui seorang lelaki warga emas berusia 69 tahun, Kamoi Paun yang hilang selama seminggu di hutan tebal Saratok. Beliau ditemui pagi ini dengan kecederaan ringan dipercayai bertahan hanya dengan minum air sungai sebel.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *