போலி செய்திகள் மத்தியில் உண்மையின் காவலர்கள் பத்திரிகையாளர்கள் - பஹ்மி பட்சில் பாராட்டு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 29-

இன்றைய காலகட்டத்தில் போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் அதிகரித்து வரும் நிலையில், உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய அரணாக பத்திரிகையாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள் என்று தொடர்பு துறை அமைச்சர் Datuk Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.

தேசிய பத்திரிகையாளர் தினமான HAWANA-வை முன்னிட்டு தனது அதிகாரப்பூர்வ Facebook பதிவில் வாழ்த்து தெரிவித்த அவர், தகவல் நேர்மையைப் பாதுகாக்கும் முன்னணி வீரர்களாக பத்திரிகையாளர்கள் திகழ வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“இன்றைய உலகில் பொய்யான தகவல்கள் சில நொடிகளில் பரவுகின்றன. பல நேரங்களில் உண்மையை விட கருத்துக்களும் வதந்திகளும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய சூழலில் தகவல்களின் நம்பகத்தன்மையைக் காக்கும் பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உள்ளது,” என்று அவர் கூறினார்.

மேலும், பத்திரிகையாளர்களின் பணி வெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்வதில் மட்டும் முடிவதில்லை என்றும், குழப்பம் மற்றும் ஊகங்கள் நிறைந்த சூழ்நிலைகளில் உண்மையின் குரலாக செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *