1 கிராம் தங்க மோதிர திட்டம் 2009-லேயே தொடங்கப்பட்டது – மா.சுப்பிரமணியன்

top-news
FREE WEBSITE AD

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் புதிதல்ல என்றும், இதே போன்ற திட்டம் 2009-ஆம் ஆண்டிலேயே சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு அறிவித்துள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் நேற்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ், 2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிருடன் பிறக்கும் தகுதியான குழந்தைகளுக்கு ஒரு கிராம், 22 காரட் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மா.சுப்பிரமணியன் தனது ‘எக்ஸ்’ பதிவில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 86-ஆவது பிறந்தநாளையொட்டி 2009-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் தமிழ்ப் பெயர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறினார்.

சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறந்து, தூய தமிழ்ப் பெயர் சூட்டப்பட்ட குழந்தைகளுக்கு இந்த மோதிரங்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *