140 கோடி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி, ஜூன் 11 –

நாட்டின் 140 கோடி மக்களும் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது அனைவரின் பொறுப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்கச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.

“உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. நிலையான ஆட்சியின் பலனை நாடு நேரடியாக அனுபவித்து வருகிறது. 140 கோடி மக்களும் நம் மீது வைத்துள்ள எதிர்பார்ப்புகளை நாம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கொரோனா பெருந்தொற்று போன்ற கடினமான காலகட்டங்களிலும் இந்தியா உறுதியுடன் செயல்பட்டு முன்னேறியதாக குறிப்பிட்ட அவர், 2025–26 நிதியாண்டில் இந்தியா 7.7 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பது நாட்டின் வலிமைக்குச் சான்று என்றார்.

மேலும், 2014 முதல் 2026 வரையிலான இந்தியாவின் வளர்ச்சி என்பது வெறும் புள்ளிவிவரங்களின் கதை அல்ல என்றும், உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய அயராது உழைக்கும் புதிய இந்தியாவின் பயணம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *