பஞ்சாப் மந்திரியை பதவி நீக்க வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்
- Surendran Sumdraraj
- 10 Sep, 2026
புதுடெல்லி, செப். 10 –
பஞ்சாப் மாநில நிதி மந்திரி ஹர்பால் சீமாவை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். சங்ருர் மாவட்டத்தைச் சேர்ந்த குல்சார் சிங் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தைத் தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹர்பால் சீமாவை சந்தித்த குல்சார் சிங், பஞ்சாபில் போதைப்பொருள் எளிதாகக் கிடைப்பது குறித்து கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சிலர் அவருக்குத் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறுநாள் குல்சார் சிங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



