குழந்தையுடன் மோட்டார் சைக்கிள் சாகசம்! தந்தை கைது!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 23,

மோட்டார் சைக்கிளில் குழந்தையையும் பின்னால் ஒரு பெண்ணையும் அமர்த்தியபடி மோட்டார் சைக்கிளில் அபாயகரமான சாகசம் செய்த மோட்டார் சைக்கிளோட்டியைக் காவல்துறை கைது செய்துள்ளது. நேற்று முதல் இது தொடர்பானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவிய நிலையில் இன்று நண்பகல் 12.41 மணிக்கு மோட்டார் சைக்கிளோட்டி அகிது செய்யப்பட்டதாக Kota Setar, மாவட்டக் காவல் ஆணையர் Syed Basri Syed Ali தெரிவித்தார். 

கடந்த சனிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு 25 வயது கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி தனது மனைவியையும் 4 வயது பெண் குழந்தையையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு Medan Bandar டத்தாரான் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 25 வயது மோட்டார் சைக்கிளோட்டி உள்ளூர் ஆடவர் என்றும் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் Kota Setar, மாவட்டக் காவல் ஆணையர் Syed Basri Syed Ali தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *