ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும்? – அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில்

top-news
FREE WEBSITE AD

வாஷிங்டன், செப். 10 –

ஈரானுடனான போர் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு உடனடியாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதார அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாது என்றும், அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த ஈரான் முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறிய டிரம்ப், அதன் பெயரை ‘டிரம்ப் ஜலசந்தி’ என மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் மீண்டும் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை அவர் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதியும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், ஈரான் அணு ஆயுதம் பெறுவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் டிரம்ப் உறுதியாக கூறினார்.

அமெரிக்காவிடம் சுமார் 500 ஆண்டுகளுக்கு போதுமான எண்ணெய் கையிருப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *