தமிழக நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று மாலை 5.30 மணிக்கு வெளியீடு

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூன் 16 –

தமிழக அரசின் தற்போதைய நிதி நிலை மற்றும் பொருளாதார சூழலைப் பொதுமக்களுக்கு வெளிப்படையாக எடுத்துரைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள வெள்ளை அறிக்கை இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், மாநிலத்தின் உண்மையான நிதி நிலையை வெளிப்படையாக மக்களிடம் தெரிவிக்கும் நோக்கில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக இன்று மாலை அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.

இந்த வெள்ளை அறிக்கையில் மாநிலத்தின் மொத்தக் கடன், வருவாய் மற்றும் செலவின நிலை, நிதிப் பற்றாக்குறை, அரசுத் திட்டங்களின் நிதிச்சுமை, அரசுத் துறைகளின் பொருளாதார நிலை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எதிர்கால நிதி மேலாண்மைக்கான அரசின் செயல்திட்டங்கள் குறித்தும் இதில் விளக்கம் அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *