“யார் அந்த இசையமைப்பாளர்?” - பாடகி Swagatha பரபரப்பு பதிவு
- Surendran Sumdraraj
- 15 May, 2026
தமிழ் திரைப்பட பின்னணி பாடகி Swagatha S Krishnan வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஒருவரைக் குறிவைத்து அவர் மறைமுகமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் அளித்த பேட்டியிலும், தனது சமூக வலைத்தள பதிவுகளிலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளரால் கடுமையான துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக Swagatha தெரிவித்துள்ளார். அந்த நபரின் பெயரை நேரடியாக வெளியிடவில்லை என்றாலும், “பல பெண்கள் இதேபோன்ற அனுபவங்களைச் சந்தித்துள்ளனர்” என கூறியுள்ளார்.
மேலும், அந்த இசையமைப்பாளர் பெண்களை நம்ப வைத்து பின்னர் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கட்டுப்படுத்தியதாகவும், ஸ்டூடியோவில் மறைமுக கேமராக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், விரைவில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் Swagatha தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



