ம.இ.கா BN-இல் தொடரும் ஆனாலும் PNல் சேரும் வாய்ப்பை நிராகரிக்கவில்லை!

top-news
FREE WEBSITE AD

Puad Zarkashi தனது கருத்துகளை முன்வைக்கும் முன், MIC மீது UMNO எப்படி நடந்துகொண்டது என்பதை சிந்திக்க வேண்டும் என PAS தலைவர்களில் ஒருவரான Iskandar Abdul Samad,  தெரிவித்துள்ளார்.

Barisan Nasional கூட்டணியில் MIC மீது நடந்த அணுகுமுறையை நினைவுபடுத்திய அவர், “அரசியலில் உண்மையான ‘புல்லிகள்’ யார் என்பதை நாமெல்லாம் அறிவோம்” என தெரிவித்தார்.இதற்கு முன், Puad Zarkashi, MIC Perikatan Nasional கூட்டணியில் சேர வேண்டாம் என்று எச்சரித்திருந்தார். PAS, Bersatu கட்சியை “அடக்கி ஆளுகிறது” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த Iskandar Abdul Samad, Utusan Malaysia வெளியிட்ட ஜூலை 27 செய்தியை மேற்கோள் காட்டினார். அதில், MIC துணைத் தலைவர் M Saravanan, Ahmad Zahid Hamidi அமைச்சரவை பதவிகள் தொடர்பில் கட்சியை தவறாக வழிநடத்தியதாக குற்றம்சாட்டி இருந்தார்.இதேவேளை, MIC Barisan Nasional-இல் தொடர வேண்டும் என்று அதன் மத்திய செயற்குழுவில் சுமார் 95% உறுப்பினர்கள் விரும்புகின்றனர் என்றும் Puad Zarkashi கூறினார். கட்சித் தலைவர் SA Vigneswaran தற்போதைய நிலைப்பாட்டைத் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நவம்பர் மாத பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, MIC கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளன. கட்சியின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து ஏற்பட்ட அதிருப்தி இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று, M Saravanan, MIC தற்போது BN-இல் தொடரும் என தெரிவித்தார். ஆனால், Perikatan Nasional-இல் சேரும் வாய்ப்பை முழுமையாக நிராகரிக்கவில்லை என்றும் கூறினார்.மேலும், PAS தற்போது PN கூட்டணியை முன்னிலை வகிப்பதால், அதன் அரசியல் நிலைப்பாடுகளை MIC மீண்டும் மதிப்பீடு செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *