இளைஞர்களுக்கு உதவிக்கரமாக இருப்பேன்! - ஓம்ஸ் பா.தியாகராஜன்

top-news

ஷா ஆலம், நவம்பர் 15: பாடாங் ஜாவா, ரிம்பா ஷா ஆலமில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் விசாலாட்சி சமேத  ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ பால சாஸ்தா நூதன சன்னதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் எனும்  திருக்குட முழக்கு நன்னீராட்டுப் பெருவிழா நேற்று காலை நடைபெற்றது.

காலை மணி 7.15 முதல் 8 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பக்த பெருமக்கள் திரளாகக் கலந்துகொண்டு இறையருள் பெற்றுச் சென்றனர்.

இவ்விழாவில் மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன் இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் மிகச்சிறப்பான முறையில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆலயம் ஒரு சரித்திரப்பூர்வமிக்க ஆலயம். பல ஆண்டுகள் கழித்து இன்று ஒரு சுமூகமான சூழலில் இளைஞர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள். நிச்சயம் கடந்த கால அனுபவத்தின் வழி சிறப்பாக இவர்கள் செயல்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நிச்சயம் நான் அவர்களுக்கு உதவிக்கரமாக இருப்பேன் என்று உறுதியளித்தார். மேலும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்த பெருமக்களின் வேண்டுதல்கள் நிறைவேற இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்