பாஸ் பேரணியில் களம் இறங்குவேன்! அம்னோவின் முடிவை மீறும் அக்மால்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 4: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு ஆதரவாக திங்கள்கிழமை நடைபெறவிருக்கும் பாஸ் பேரணியில் கலந்து கொள்வதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே தெரிவித்துள்ளார்.

ஒரு அம்னோ உறுப்பினராக, அரச மன்னிப்பு வழங்குவது தொடர்பாக  மாமன்னரின் அதிகாரங்களைத் தாம் மதிப்பதாகவும், பேரணியில் சேராமல் இருப்பதற்கான கட்சியின் முடிவையும் மதிப்பதாகவும் தெரிவித்த அவர்,
 இருப்பினும், நஜிப்பிற்கு தனது ஆதரவைக் காட்ட  தனிப்பட்ட முறையில்  தாம் கலந்துகொள்ளப்போவதாக அவர் மேற்கோள் காட்டினார்.

சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நஜிப்பிற்கு ஆதரவாக திங்கள்கிழமை திட்டமிடப்பட்ட பேரணியில் இருந்து அம்னோ வெளியேறியதாக நேற்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *