சர்ச்சையில் சிக்கிய விம்பிள்டன் சாம்பியன்... 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட வாய்ப்பு?
- Surendran Sumdraraj
- 20 Apr, 2026
உலக டென்னிஸ் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் Marketa Vondrousova தற்போது டோப்பிங் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
2023ஆம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்ற இந்த செக் குடியரசு வீராங்கனை, டோப்பிங் சோதனையை மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில், சர்வதேச டென்னிஸ் நேர்மை அமைப்பு (ITIA) அவர்மீது விசாரணை நடத்தி வருகிறது.
விதிகளின்படி, டோப்பிங் சோதனையை தவிர்ப்பது அல்லது மாதிரி அளிக்க மறுப்பது கடுமையான விதிமுறை மீறலாக கருதப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை போட்டிகளில் இருந்து தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இரவு நேரத்தில் டோப்பிங் அதிகாரி ஒருவர் வீட்டிற்கு வந்தபோது, அவர் தன்னை சரியாக அடையாளம் காணவில்லை என்பதால், பாதுகாப்பு காரணங்களால் சோதனையை மறுத்ததாக Vondrousova விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், உடல் காயம், தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



