JDT வெற்றி - ஜொகூரில் விடுமுறை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 15: நேற்றைய இறுதிப் போட்டியில் சபாவை வீழ்த்தி 2025 FA கிண்ணத்தை ஜொகூர் தாருல் தா'சிம் (JDT) வெற்றி பெற்றதை முன்னிட்டு, ஜொகூர் அரசாங்கம் இன்று மாநிலத்திற்கு சிறப்பு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய அறிக்கையில், மலேசிய கால்பந்தில் அணியின் சிறந்த ஆதிக்கத்தைத் தொடர்வதற்கான கொண்டாட்டத்தின் அடையாளமாக, ஜொகூர் ஆட்சியாளர் துங்கு மக்கோத்தா  இஸ்மாயிலின் ஆணைக்கு இணங்க இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறினார்.

இருப்பினும், இன்று திட்டமிடப்பட்ட SPM) தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும், இதனால. தேர்வு எழுதும் மாணவர்களின்  தயாரிப்புகள் மற்றும் தேர்வு பணியாளர்களின் கடமைகள் பாதிக்கப்படக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

நேற்று புக்கிட் ஜலீலில் உள்ள தேசிய மைதானத்தில் சபாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி, தொடர்ந்து நான்காவது சீசனுக்கான FA கோப்பையை தக்கவைத்துக்கொண்டு JDT வரலாறு படைத்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *