நாட்டை மீண்டும் வழிநடத்த விருப்பம்! வலிமையான நாடாக மாற்றுவேன்! - அன்வார்
- Shan Siva
- 26 Nov, 2026
கோலாலம்பூர், நவ26: மலேசியாவின் அடுத்த பொதுத்தேர்தலுக்குப் பின்னரும், மீண்டும் பிரதமராக நாட்டை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தால் அதனை விரும்புவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
RTM தொலைக்காட்சியின் Dialog Negara நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இதனைத் தெரிவித்த அவர், மலேசியாவின் எதிர்கால வளர்ச்சியில் தமக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மலேசியாவை வலிமையான நாடாக உருவாக்குவதுடன், இளம் தலைமுறையினர் நாட்டை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், நாட்டின் 16-ஆவது பொதுத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்து மக்கள் பொறுமை காக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அன்வார், அடுத்த பொதுத்தேர்தல் 2028-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், அரசியல்வாதிகள் வெளியிடும் மதம் சார்ந்த கருத்துகளை மக்கள் கவனமாக அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் நோக்கங்களுக்காக மத விளக்கங்கள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அரசியல் கருத்துகளையும் உண்மையான மதச் சட்டங்களையும் மக்கள் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

