இரண்டாவது முறையாக செனட்டர்களாக இரண்டு துணை அமைச்சர்கள்!

top-news
FREE WEBSITE AD

டிச:10,

மேலவைத் தலைவர் அவாங் பெமி அவாங் அலி பாசா முன்னிலையில் இன்று இரண்டாவது முறையாக செனட்டர்களாக இரண்டு துணை அமைச்சர்கள் பதவியேற்றனர்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் துணை அமைச்சர் ஃபுசியா சாலே மற்றும் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் துணை அமைச்சர் கே சரஸ்வதி இருவரும் மீண்டும் செனட்டர்களாகப் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சரவையில் தங்கள் பொறுப்புகளைத் தொடர்ந்து நிறைவேற்ற உதவும் அவர்களின் மறுநியமனங்கள் இன்று டிசம்பர் 10 தொடங்கி 2028 வரை அமலில் இருக்கும்.

அவர்கள் டிசம்பர் 10, 2022  முதல் பதவிக்காலத்திற்கான செனட்டர்களாகப் பதவியேற்றனர்.செனட்டர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு அவாங் பெமி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார், மேலும் அவர்கள் தங்கள் கடமைகளைச் சிறப்பாகச் செய்ய வாழ்த்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *