கெந்திங்கில் பஸ் கவிழ்ந்து சீனர் இருவர் பலி!

top-news


பெந்தோங், ஜூன் 29: இன்று ஜாலான் கெந்திங்-பெந்தோங் Km16.5 இல் மலையில் இருந்து கீழே இறங்கிய சுற்றுலா பேருந்து, சாலையில் ஒரு பக்கமாகச் சரிந்ததில்  இரண்டு சீன பிரஜைகள் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.

இன்று காலை 10.40 மணியளவில் நடந்த இந்த விபத்தின் போது சம்பவ இடத்திலேயே இருக்கையில் சிக்கியவாறு சம்பந்தப்பட்ட இரு ஆடவர்களும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குநர் (செயல்பாடுகள்) இஸ்மாயில் அப்துல் கானி கூறுகையில்,

ஆரம்பக் கட்ட  விசாரணையில் இரண்டு பேர் இறந்ததாகவும், 16 சீன பிரஜைகள் மற்றும் மூன்று உள்ளூர்வாசிகள் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது!

 


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்