சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சிறப்பு ஊதிய உதவி – டிசம்பர் 21ஆம் தேதிக்குள் வழங்கப்படும்

top-news

கோலாலம்பூர், நவ 14: சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளத்திற்குச் சமமான சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான இந்தச் சிறப்பு நிதி உதவி, குறைந்தபட்சம் ஆயிரம் ரிங்கிட் என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

மாநில அரசின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்கள் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இந்த உதவி வழங்கப்படுவதாக அமிருடின் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொகை வரும் டிசம்பர் 21ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்றும் இதற்காக 100.31 மில்லியன் ரிங்கிட் செலவிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த உதவியில் மாநில அரசின் சம்பளப் பட்டியலில் உள்ள ஊழியர்கள் மட்டுமின்றி, மத்திய அரசின் சம்பளப் பட்டியலில் இருந்தாலும் சிலாங்கூரில் பணியாற்றும் அரசு ஊழியர்களும், குர்ஆன் மற்றும் மார்க்கக் கல்வி வகுப்பு ஆசிரியர்களும் இடம்பெறுகின்றனர்.

இதற்கிடையில், சிலாங்கூர் மாநிலத்தில் பணியாற்றும் KAFA சமயக் கல்வி ஆசிரியர்களின் மாதாந்திரக் கொடுப்பனவை 1,500 ரிங்கிட்டிலிருந்து 1,700 ரிங்கிட்டாக உயர்த்தவும் மாநில அரசு முன்மொழிந்துள்ளது.

இந்த உயர்வு 2027 ஜனவரி முதல் நடைமுறைக்கு வருவதுடன், 7,245 ஆசிரியர்கள் இதனால் பயனடைவார்கள். இதற்காக கூடுதலாக 14 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2027 ஜூன் மாதத்தில் மத்திய அரசின் புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதம் நடைமுறைக்கு வரும்போது, KAFA ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,000 ரிங்கிட்டாக உயர்த்தும் திட்டமும் இருப்பதாக அமிருடின் தெரிவித்துள்ளார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்