தலைநகரில் காரில் கருகி இருவர் மரணம்! - DUKE சாலையில் சோகம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 27: இன்று அதிகாலை கோலாலம்பூரில் உள்ள டூத்தா – உலு கிள்ளான் விரைவுச்சாலையில்உள்ள ஜாலான் கூச்சிங் வெளியேறும் வளைவில், கார் சறுக்கி, மோதி தீப்பிடித்ததில் இருவர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவரும் தீயில் கருகி உயிரிழந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காலை 5.20 மணிக்குத் தங்களது செயல்பாட்டு மையத்திற்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, ஜின்ஜாங் மற்றும் ஸ்ரீ ஹர்த்தாமாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அது கூறியது.

அங்கு சென்ற குழுவினர், தீப்பிழம்புகளால் சூழப்பட்ட ஒரு வாகனத்தையும், அதற்குள் இருந்த மூன்று பேரையும் கண்டனர்.

எரிந்து கொண்டிருந்த வாகனத்தில் சிக்கியிருந்த இருவர் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். அதே நேரத்தில் மூன்றாவது நபர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து மற்றும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை கூறியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *