பாங்கியில் கொள்ளையர்கள் இருவர் சுட்டுக் கொலை! போலிஸ் அதிரடி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 26: நேற்று இரவு பாங்கியில், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கொல்லப்பட்டனர்.

பண்டார் ஸ்ரீ  புத்ராவில் உள்ள ஜாலான் பெர்சியாரன் ஸ்ரீ புத்ரா 2 சாலையில், இரவு சுமார் 8.10 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் எம். குமார் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்த பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

சம்பவ இடத்தில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, பல தோட்டாக்கள், தோட்டா உறைகள், நான்கு பாராங்குகள், வீடு உடைக்கும் உபகரணங்கள், முகமூடிகள் மற்றும் கையுறைகளை காவல்துறை மீட்டெடுத்தது என்று அவர்  ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதனையடுத்து இன்று  நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை கூடுதல் தகவல்களை வழங்கும் என்று குமார் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *