தந்தையின் கல்லறைக்குச் சென்ற உடன்பிறப்புகள் இருவர் விபத்தில் மரணம்!

top-news

கோலாலம்பூர், செப் 24: தங்கள் தந்தையின் கல்லறையைப் பார்வையிடச் சென்ற இரண்டு உடன்பிறப்புகள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று மாலை மலாக்காவில் உள்ள ஹாங் ஜெபாட் ஸ்டேடியம் அருகே லெபோ SPA வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

18 வயது அமிருல் ஹாஸ்லின், மற்றும் அவரது சகோதரி நூர் அஃபிகா சோஃபியா, நேற்று மாலை 6.15 மணியளவில் சாலையோரத்தில் இருந்த (ரோல்-ஆன் ரோல்-ஆஃப்) குப்பைத் தொட்டியில் மோதியதாக சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.

மோதலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர், மேலும் அவர்கள் சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பிருப்பினும் அமீருல் இரவு 7.40 மணிக்கு இறந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர், அதைத் தொடர்ந்து அவரது தங்கை நள்ளிரவு 12.30 மணியளவில் இறந்தார் என்று  இன்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்