கையெறி குண்டு வெடித்து ராணுவ வீரர்கள் இருவர் பலி! 7 பேரிடம் காவல்துறை வாக்குமூலம் பதிவு

top-news
FREE WEBSITE AD

கோலலம்பூர், ஜூன் 17: நேற்று காலை குருனில் உள்ள ஹோபார்ட் முகாமில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியான கையெறி குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையில், கெடா காவல்துறை ஏழு பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

மற்ற சாட்சிகளிடமும் இன்று வாக்குமூலம் தொடர்ந்து பதிவு செய்யப்படும் என்று கெடா காவல்துறை துணைத் தலைவர் பதேருல் ஹிஷாம் பஹாருதீன் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் கையெறி குண்டு வீசும் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் உட்பட சம்பவ இடத்தில் இருந்தவர்களும் அடங்குவர் என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

காலை 10.57 மணிக்கு பயிற்சியின் போது கையெறி குண்டு வெடித்ததில், கார்ப்பரல் நொராஸ்மி அபு பக்கார் மற்றும் சித்தி காதிஜா சுங்கிப் ஆகியோர் பலத்த காயங்களால் உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்கள், சுங்கை பெட்டாணியில் உள்ள சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையிலிருந்து, அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

காவல்துறையினர் இதில் எந்தவிதமான சதிச் செயலுக்கான கூறுகளையும் கண்டறியாததால், இந்த வழக்கு தற்போது திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பஹாருதீன் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *