சிலாங்கூரில் 45 வெளிநாட்டினர்கள் கைது! குடிநுழைவுத் துறை விசாரணை!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 24,

சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்து முறையான ஆவணங்கள் இல்லாமல் வேலை செய்து வரும் வெளிநாட்டினர்களுக்கு எதிராகச் சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில் 45 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Semenyih, Jenjarom, Seri Kembangan, Cheras, Serdang ஆகிய பகுதிகளில் 52 குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கொண்ட குழு 22 உள்ளூர்வாசிகளையும் 66 வெளிநாட்டினர்களையும் சோதனையிட்டது. 

முழுமையான சோதனைக்குப் பின்னர் உள்ளூர்வாசிகளும் முறையான ஆவணங்களைக் கொண்டிருக்கும் வெளிநாட்டினர்களையும் விடுதலை செய்த பின்னர் ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 45 வெளிநாட்டினர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் 29 முதல் 50 வயதுக்குற்பட்ட Bangladesh, Myanmar, India, Nepal , Indonesia ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *