சீக்கிய குருத்வாராக்கள், இந்திய கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு நிதியுதவி விரிவாக்கம்

top-news

கோலாலம்பூர், அக் 27: புத்ராஜெயா, ஹார்மோனி மதானி திட்டத்தின் கீழ் சீக்கிய குருத்வாராக்கள் மற்றும் இந்திய கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி விரிவுபடுத்தப்படும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

இதற்குத் தகுதியான வழிபாட்டுத் தலங்களை மேலும் அடையாளம் காணுமாறு மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ராவின் தலைமை இயக்குநர் ரவேந்திரன் நாயருக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

பெர்கேசோ தலைமையகத்தில் நடைபெற்ற காசோலை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் திட்டம் இந்துக் கோவில்களுக்கு உதவி வழங்கும் தர்மா மதானி திட்டத்துடன் இணைந்து செயல்படுவதாகத் தெரிவித்தார்.

ஹார்மோனி மதானி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 164 வழிபாட்டுத் தலங்களுக்கு மொத்தம் 32 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 57 சீக்கிய குருத்வாராக்களும் 12 தேவாலயங்களும் அடங்கும். எஞ்சியவை இந்துக் கோவில்களாகும்.

இதற்கிடையே, தர்மா மதானி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 771 இந்துக் கோவில்களுக்கு மொத்தம் ஒரு கோடியே 54 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் நிதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோவிலுக்கும் 20 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படுகிறது.

மேலும், உயர்வு மதானி மானியத் திட்டத்தின் கீழ் 8,368 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக ரமணன் தெரிவித்தார். ஆரம்பத்தில் 700 பேருக்கு மட்டுமே உதவி வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்து பயனாளிகளின் எண்ணிக்கை 1,100 முதல் 1,150 வரை அதிகரிக்கக்கூடும் என்றார்.

ஒவ்வொரு பயனாளிக்கும் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரிங்கிட் வரை மானியம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பதாரர்களின் தேவைகளுக்கு ஏற்ப 20 ஆயிரம் அல்லது 30 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

சிறு தொழில்முனைவோருக்கு மேலும் உதவுவதற்காகக் கூடுதல் நிதி ஆதாரங்களை மித்ரா ஆராயும் என்றும், உண்மையில் நிதியுதவி தேவைப்படும் மற்றும் வெற்றிபெற வாய்ப்புள்ள தொழில்களை நடத்தும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அரசு நிறுவனங்களின் மற்ற நிதித் திட்டங்களைப் போலல்லாமல், உயர்வு மதானி திட்டத்தில் கடனுக்குப் பதிலாக மானியம் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்