ரயிலில் வெடிப்புச் சத்தம்! பாதிப்பில்லை என ரேபிட் கே.எல் அறிவிப்பு
- Shan Siva
- 01 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 7: தாமான் ஜெயாவில் உள்ள LRT ரயில் நிலையத்தில், நேற்று மாலை, உருகிய ஒரு மெல்லிய கம்பி, ரயில் அமைப்பின் மின் இணைப்பில் சிக்கியதால் ஒரு சிறிய வெடிப்புச் சத்தம் ஏற்பட்டது. புத்ரா ஹைட்ஸ் நோக்கிச் சென்ற போது சுமார் 7.18 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ரேபிட் கே.எல். கூறியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த ரயில், சேவையிலிருந்து நிறுத்தப்பட்டு, பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடர மற்றொரு பெட்டிக்கு மாற்றப்பட்டனர்.
சோதனையில், ரயிலிலோ அல்லது அதன் பாகங்களிலோ எந்த சேதமும் இல்லை என்றும், யுனிவர்சிட்டி மற்றும் தாமான் ஜெயா நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளங்கள் நல்ல நிலையிலும், இயக்கத்திற்குப் பாதுகாப்பாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.
இயக்க நேரத்திற்குப் பிறகு மேலதிக சோதனைகள் நடத்தப்பட்டன. விசாரணையில், ரயில் அல்லது தண்டவாளப் பாகங்களின் ஒரு பகுதியாக இல்லாத ஒரு மெல்லிய கம்பி சம்பவ இடத்தில் உருகியிருந்தது கண்டறியப்பட்டது.
அந்தக் கம்பி மின் விநியோக அமைப்பில் சிக்கியதால், ஒரு சிறிய வெடிப்புச் சத்தம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று அது ஒரு அறிக்கையில் கூறியது.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கிளானா ஜெயா lrt சேவை வழக்கம் போல் இயங்கியது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



