PN போட்டியிடும் தொகுதிகளில் ஆதரவு கொடுங்கள்! அம்னோ உத்தரவு
- Shan Siva
- 29 Oct, 2026
கோலாலம்பூர், அக் 29: மலாக்கா மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சிக்கு முழு ஆதரவு வழங்குமாறு அம்னோ தனது தேர்தல் பணியாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, பாஸ் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் ஒத்துழைப்பை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த அம்னோ முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஸ்ரஃப் வஜ்டி டுசுக்கி தெரிவித்தார்.
மேலும், இந்தத் தேர்தலுக்காக தேசிய முன்னணியும் பெரிக்காத்தான் நேஷனலும் இணைந்து தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் அம்னோவும் பாஸும் இணைந்து போட்டியிட்டு, மொத்தமுள்ள 36 தொகுதிகளில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
அந்தத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடாத 25 தொகுதிகளில் அதன் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்குமாறு பெரிக்காத்தான் நேஷனல் தனது உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டது. அதேபோல், பெரிக்காத்தான் நேஷனல் போட்டியிட்ட 11 தொகுதிகளில் அதன் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தேசிய முன்னணித் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடியும் கேட்டுக்கொண்டார்.
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

