சைட் சாடிக்கிற்கு விரைவில் நிதி ஒதுக்கீடு கிடைக்கும்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 11-

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடிலா யூசோப்பை ஐந்து முறை சந்தித்துப் பேசியிருப்பதால் தமக்கு விரைவில் அரசாங்க நிதிஒதுக்கீடு கிடைக்கும் என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் நேற்று தெரிவித்தார். நம்பிக்கை மற்றும் விநியோக ஒப்பந்தத்தில் (சிஎஸ்ஏ) அல்லது கருத்திணக்கக் குறிப்பில் கையெழுத்திடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

சொத்துகளை அறிவிப்பது உட்பட எல்லா நிபந்தனைகைைளயும் நிறைவேற்றுவதற்கு நான் தயாராக உள்ளேன். மூவார் தொகுதி மக்களின் நலனைப் பேணிவரவேண்டும் என்பதே இதில் முக்கியமாகும் என்றார் சைட் சாடிக்.சொத்துகளை அறிவிக்க வேண்டியிருந்தால் அவ்வாறே நான் செய்வேன். தேர்தலுக்கு முன்பாக சொத்துகளை விரைந்து அறிவித்த அமைச்சர்களுள் நானும் ஒருவன். ஒவ்வோர் ஆண்டும் சொத்துகளை அறிவிக்க வேண்டுமென்றால் அதற்கும் தயாராக இருக்கிறேன் என்றார் அவர்.

மூடா கட்சியின் முன்னாள் தலைவரான சைட் சாடிக் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளார் என்று அரசாங்க கலந்தாலோசனை மன்றத்தின் தலைவரான ஃபாடிலா முன்னதாக தெரிவித்திருந்தார்.

Ahli Parlimen Muar, Syed Saddiq, yakin menerima peruntukan kerajaan selepas lima pertemuan dengan TPM Fadillah Yusof. Beliau sedia memenuhi syarat termasuk mengisytiharkan aset. Bekas Ketua Muda itu menyatakan kesediaannya menandatangani memorandum persefahaman demi kebajikan rakyat Muar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *