ஏப்ரல் 26 ஆம் தேதியில் ஆயர் கூனிங் இடைத்தேர்தல்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா:

பேராக் ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் (EC) இன்று அறிவித்துள்ளது.

இன்று காலை தேர்தல் ஆணையத் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹருன், ஏப்ரல் 12 ஆம் தேதி வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்றும், ஏப்ரல் 22 ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

பிப்ரவரி 22 ஆம் தேதி அம்னோ சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருதீன் இறந்ததைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.கடந்த பொதுத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டியில் 2,213 பெரும்பான்மையுடன் இஷாம் வெற்றி பெற்றார்.

Suruhanjaya Pilihan Raya (SPR) mengumumkan pilihan raya kecil (PRK) bagi kerusi DUN Ayer Kuning, Perak, akan diadakan pada 26 April. Penamaan calon ditetapkan pada 12 April, manakala undi awal pada 22 April. PRK ini diadakan susulan kematian ADUN UMNO, Isham Shahruddin.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *