கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளியில் உலக யோகா நன்னாள் விழா!

top-news

ஜூன் 30,

அனைத்துலக யோகா நன்னாளை முன்னிட்டு, கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளியில் 12-ஆவது உலக யோகா நாள் கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை மிக விமரிசையாக நடைபெற்றது. சக்தி யோகா பள்ளியின் (Sakthi School of Yoga) இணைப்பான ஶ்ரீ அருணாசலேஸ்வரர் யோகா சாலா மற்றும் சக்தி யோகா பள்ளியின் நிறுவனர் மாஸ்டர் எஸ்.கே. துரை அவர்களின் மாணவர்கள் இந்துமதி & ராஜ்மோகன் ஆகியோரின் ஏற்பாட்டுக் குழுவினர் இணைந்து இவ்விழாவினை  ஏற்பாடு செய்திருந்தனர்.

காலை 7:00 மணிக்கு சிறப்பு யோகா பயிற்சியுடன் தொடங்கிய இவ்விழாவில், பள்ளியின் தலைமையாசிரியர், மருத்துவர், யோகா ஆசிரியர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களின் சிலம்பாட்டம், யோகா செய்முறை, தேக்வாண்டோ, ஜூம்பா, பாரம்பரிய உருமி மேளம் போன்ற கலை நிகழ்ச்சிகளும், குழந்தைகளுக்கான மாயாஜால வித்தைகளும் அரங்கேறின. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவப் பரிசோதனை, மாணவர் வர்ணம் தீட்டும் போட்டி, புத்தகக் கண்காட்சி, உணவு அங்காடிகள், நற்பேற்றுக் குலுக்கல் எனப் பல்வேறு அங்கங்களுடன் பள்ளி வளாகம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் அமைந்த இவ்விழாவில் திரளான பொதுமக்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *