இந்த ஆண்டு இறுதியிலேயே நாடாளுமன்றம் கலைப்பு! பாரிசான் எதிர்பார்ப்பு!
- THINAGAREN SANGGAREN
- 26 Jul, 2026
ஜூலை 26,
இந்த
ஆண்டு இறுதியில் நாடாளுமன்றம் கலைக்கபடும் என தாம் எதிர்பார்ப்பதாகப் பாரிசான்
துணைத் தலைவரும் அமைச்சருமான Datuk
Seri Mohamad Hasan தெரிவித்தார். அப்படி நாடாளுமன்றம்
கலைக்கப்பட்டால் தாம் Rembau நாடாளுமன்றத்திலேயே
போட்டியிடுவேன் என உறுதிப்படுத்தினார். தேர்தலுக்கான சூழ்நிலை சாதகமாக இருப்பதாகப்
பிரதமர் அன்வார் நினைத்தால், டிசம்பரில் நாடாளுமன்றம்
கலைக்கப்படுவது உறுதி என Datuk Seri Mohamad Hasan
தெரிவித்தார்.
ஜொகூர்
தேர்தலில் பாஸ் கட்சியுடன் மறைமுகமாகக் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்நோக்கிய
பாரிசான் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. தற்போது நெகிரி செம்பிலான் மாநிலச்
சட்டமன்றத் தேர்தலில் பாரிசானுக்கு வெளிப்படையாகப் பாஸ், கெராக்கான், MIPP ஆகிய பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சிகள்
ஆதரவளித்ததுடன் பாரிசான் போட்டியிடாத குறிப்பிட்ட சட்டமன்றங்களில் மட்டுமே
போட்டியிடுவதாகப் பெரிக்காத்தான் தலைமை முடிவெடுத்துள்ளது. மாநிலச் சட்டமன்றத்
தேர்தலில் பாரிசான் பெரிக்காத்தான் கூட்டணி என்பது நாடாளுமன்றத் தேர்தலிலும்
தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



