மகாதீரின் வயதுக்குத் தான் மரியாதை! அவரின் செயலுக்கு இல்லை! – ZAHID HAMIDI

- Sangeetha K Loganathan
- 30 Jan, 2025
ஜனவரி 30,
அம்னோ வரலாற்றில் சில மன்னிக்க முடியாதவர்கள் வரிசையில் முன்னாள் அம்னோ தலைவர் மகாதீர் இருப்பதாகத் துணைப்பிரதமரும் அம்னோ தலைவருமான Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். மகாதீரின் வயதுக்கு மட்டும் மரியாதை, அவரின் செயலுக்கு இல்லை என்பதை Datuk Seri Dr Ahmad Zahid Hamidi வலியுறுத்தினார்.
அம்னோவால் வளர்ந்தவர்கள் பின்னாளில் அம்னோவுக்கு எதிராகச் செயல்பட்டாலும் அவர்கள் யாரும் அம்னோவை அழிக்க முயற்சிக்கவில்லை. ஆனால் மகாதீர் அதைச் செய்தார். இன்னமும் மகாதீர் அதையே செய்ய துடிக்கிறார் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார்.
மகாதிருக்கு வயது அதிகம் என்பதால், வயோதிகத்திற்காக அவரை மதித்து சில இடங்களில் நான் அமைதியாக இருக்க முயற்சிக்கிறேன். ஆனால் சில நேரங்களில் மகாதீர் செய்த செயல்களும், அவரின் கருத்துகளும் நினைவுக்கு வரும் போது கோபத்தை வெளிப்படுத்துவிடுகிறேன் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
Datuk Seri Dr Ahmad Zahid Hamidi menyatakan bahawa beliau menghormati Tun Dr Mahathir Mohamad kerana usianya tetapi tidak setuju dengan tindakannya terhadap UMNO. Zahid mengkritik Mahathir kerana bertindak menentang UMNO serta beliau meluahkan kemarahan terhadap beberapa tindakan Mahathir.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *