மக்கள் சேவைக்காக அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வையுங்கள்! ZAHID HAMIDI

- Sangeetha K Loganathan
- 30 Jan, 2025
ஜனவரி 30,
மக்களுக்குச் சேவையாற்றவே அரசியல் வருகிறோம் என்பதை அனைத்து அரசியல்வாதிகளும் உணர வேண்டும் என துணைப்பிரதமரும் பாரிசான் தலைவருமான Datuk Seri Dr Ahmad Zahid Hamidi வலியுறுத்தினார். அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்றால் மக்களுக்குச் சேவையாற்றுபவர்களாக இருக்க வேண்டும். அரசியலில் நண்பரும் எதிரியும் மாறுவது சுயநலனுக்காக இல்லாமல், மக்கள் சேவைக்காக இருக்க வேண்டும் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi கேட்டுக் கொண்டார்.
கூட்டணிக் கட்சிகளாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் நலனுக்காக வெவ்வேறு கட்சியைப் பின்னனியாகக் கொண்டிருப்பவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும், முக்கியமாக அரசியல் கட்சி, மொழி, இனம், மதம், கலாச்சாரம், பண்பாடுகள் கடந்து மக்கள் சேவையை முன்னிருத்தினால் அவர்களே உண்மையானத் தலைவர்கள் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
Datuk Seri Dr Ahmad Zahid Hamidi, Timbalan Perdana Menteri menyeru ahli politik untuk mengetepikan perbezaan politik dan bekerjasama demi berkhidmat kepada rakyat. Beliau menekankan pentingnya perpaduan dalam kalangan pemimpin untuk kesejahteraan masyarakat tanpa mengira latar belakang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *