பாரிசானும் பக்காத்தானும் அப்போது அரசியல் எதிரிகள்! இப்போது இல்லை! – ZAHID HAMIDI

- Sangeetha K Loganathan
- 24 Nov, 2024
அரசாங்கத்தை அமைக்க பாரிசானும் பக்காத்தானும் கூட்டணி அமைத்திருப்பதைப் பாரிசான் உறுப்புக் கட்சிகளும் பக்காத்தான் உறுப்புக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளதைத் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என பாரிசான் தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi கேட்டுக் கொண்டார். அம்னோவுக்கும் டி.ஏ.பிக்கும் ஏற்படும் கருத்து முரண்கள் என்பது காலங்காலமாக நிகழ்ந்து வருவதை இரு கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் டி.ஏ.பி கட்சி பூமிபுத்ராக்களுக்கு எதிரானது எனும் கருத்தைத் தாம் ஏற்கவில்லை என்றும் அது உண்மையில்லை என்றும் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். தனிப்பட்ட முறையில் அம்னோவுக்கும் டி.ஏ.பிக்கும் இருக்கும் கருத்து முரணால் ஒற்றுமைக் கூட்டணிக்குப் பாதிப்பு ஏற்படாது என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi உத்தரவாதம் அளித்துள்ளார்.
Zahid Hamidi menegaskan Barisan Nasional dan Pakatan Harapan kini bekerjasama membentuk kerajaan. Beliau menyeru ahli menerima gabungan ini meskipun wujud perbezaan pendapat antara UMNO dan DAP.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *